குறைதீர் கூட்டத்தில்410 மனுக்கள் ஏற்பு
குறைதீர் கூட்டத்தில்410 மனுக்கள் ஏற்புஈரோடு:ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. வீட்டுமனை பட்டா, நத்தம் பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உட்பட, 410 மனுக்கள் பெறப்பட்டன. தொடர்புடைய துறை விசாரணைக்காக அவை அனுப்பி வைக்கப்பட்டன. கூட்டுறவு துறை சார்பில் தனி நபர் விபத்து காப்பீடு திட்டத்தில், சென்னியங்கிரிவலசு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க உறுப்பினர் சாலை விபத்தில் இறந்ததால், அவரது மனைவிக்கு, மூன்று லட்சம் ரூபாய் காப்பீடு திட்டத்தில் வழங்கினர். மாவட்ட வழங்கல் துறை சார்பில் ரேஷன் கடை விற்பனையாளர் இருவர், ஒரு எடையாளருக்கு சிறந்த பணியாளர் விருது, பாராட்டு சான்றிதழ் மற்றும் 10,000 ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.