மேலும் செய்திகள்
குறைதீர் கூட்டத்தில் 410 மனுக்கள் ஏற்பு
03-Sep-2024
ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனை, மகளிர் உரிமை தொகை, முதியோர் உதவித்தொகை உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 564 மனுக்கள் பெறப்பட்டன. அந்தந்த துறை விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியம் மூலம், 5 நபர்களுக்கு தலா, 5,000 ரூபாய் மதிப்பில் திருமண நிதியுதவி, 3 பேருக்கு, 4,500 ரூபாய் மதிப்பில் கல்வி நிதியுதவி, ஒருவருக்கு, 75,000 ரூபாய் மதிப்பில் ஈமச்சடங்கு மற்றும் இயற்கை மரண நிதியுதவி வழங்கப்பட்டது. டி.ஆர்.ஓ., சாந்தகுமார், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் செல்வராஜ் மனுக்களை பெற்றனர்.
03-Sep-2024