போதை வாகன இயக்கம் ஒரே இரவில் 58 வழக்கு
ஈரோடு, ஈரோடு மாவட்டம் முழுவதும் போலீசார், நேற்று முன்தினம் இரவு சிறப்பு சோதனை நடத்தினர். இதில் மது போதையில் வாகனம் இயக்கியதாக, 58 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். விபத்து ஏற்படும் வகையில் வாகனம் ஓட்டியதாக, 68 வாகன ஓட்டிகள் மீதும் வழக்கு பதிவு செய்தனர். 125 வாகனங்களை தணிக்கைக்கு உட்படுத்தி, ஆவணங்கள் சமர்பிக்காத வாகனங்களை கைப்பற்றினர். பழங்குற்றவாளிகள், 182 பேர் மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட பழங்குற்றவாளிகள், 132 பேர் என, 314 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.