மேலும் செய்திகள்
வனப்பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் பிரேதம்
08-Aug-2025
சத்தியமங்கலம்:சத்தியமங்கலம் அருகே புலி, சிறுத்தைகளை வேட்டையாடி தோல், பற்களை விற்பனை செய்த பவாரியா கும்பலை சேர்ந்த ஆறு பேருக்கு, மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த, அரசூர் சந்தை கடையில், 2023ல் சத்தி வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்பகுதியில் கூடாரம் அமைத்து தங்கியிருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த ஆறு பேரை பிடித்து விசாரித்தனர். இதில், ராஜஸ்தானைச் சேர்ந்த ராம்சந்தர், 52, பஞ்சாபைச் சேர்ந்த மங்கல், 35, திமலா, 55, சுனிதா, 32, கிருஷன், 61, ரத்னா, 44, என்பது தெரிந்தது. நீலகிரி மாவட்டம், அவலாஞ்சி பகுதியில் புலி, சிறுத்தைகளை வேட்டையாடி, தோல், பற்களை விற்பனை செய்வதற்காக கூடாரத்தில் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். ஆறு பேரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு, சத்தி குற்ற வியல் நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி ரஞ்சித் குமார் நேற்று தீர்ப்பளித்தார். 'பவாரியா' கும்பலை சேர்ந்த ஆறு பேருக்கும் மூன்றாண்டுகள் சிறை, தலா, 25,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
08-Aug-2025