மூதாட்டி வீட்டில் 6 பவுன் நகை திருட்டு
புன்செய்புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டி, பவானிசாகர் சாலை, கணேசபுரத்தை சேர்ந்தவர் லட்சுமி, 58; கணவர் இறந்து விட்ட நிலையில் தனியாக வசிக்கிறார். வெங்க நாயக்கன்பாளையயத்தில் உள்ள தம்பி ஈஸ்வரன் வீட்டுக்கு கடந்த, 27ம் தேதி இரவு சென்றார். மறுநாள் காலை வீடு திரும்பியபோது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, மூன்று பவுன் தங்கச்சங்கிலி, மோதிரம், கம்மல் உள்ளிட்ட ஆறு பவுன் நகை திருட்டு போனது தெரிய வந்தது. லட்சுமி புகாரின்படி புன்செய்புளியம்பட்டி போலீசார், சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.