மாநகராட்சி குறைதீர் கூட்டத்தில் 7 மனு
ஈரோடு, ஈரோடு மாநகராட்சியில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. மேயர் நாகரத்தினம் தலைமை வகித்தார். துணை மேயர் செல்வராஜ், துணை ஆணையர் தனலட்சுமி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கே.ஏ.நகர் மக்கள் அளித்த மனுவில், 'எங்கள் பகுதியில் ஏராளமன குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள குழந்தைகள் பெரும்பாலும் கருங்கல்பாளையம் அரசு பள்ளியில் படிப்பதால், காலை, மாலை இரண்டு நேரமும் நடந்து செல்கின்றனர்.வாகனங்கள் அதிவேகத்தில் வருவதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வேகத்தடை அமைத்துத்தர வேண்டும்' என தெரிவித்திருந்தனர். இதேபோல் வரி பிரச்னை, குடிநீர் பிரச்னை, சாலை பிரச்னை என, ஏழு மனு பெறப்பட்டது.கடந்த வாரம் நடந்த மக்கள் குறைத்தீர் கூட்டம் தாமதமாக துவங்கியது. இதுகுறித்து நாளிதழில் செய்தி வந்ததால், நேற்று சரியான நேரத்துக்கு தொடங்கியது.