உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 76 டன் காய்கறி விற்பனை

76 டன் காய்கறி விற்பனை

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், ஈரோடு பெரியார் நகர், தாளவாடி, சத்தி, கோபி, பெருந்துறையில் உழவர் சந்தை செயல்படுகிறது. விடுமுறை தினமான நேற்று ஆறு உழவர் சந்தைகளுக்கும், 76.06 டன் காய்கறி, பழங்கள் வரத்தாகி விற்றது. இதன் மதிப்பு, 26.59 லட்சம் ரூபாய். மொத்தம், 11,124 வாடிக்கையாளர்கள் உழவர் சந்தைக்கு வந்து சென்றனர்.இதில் ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தையில் மட்டும், 32.25 டன் காய்கறி, பழங்கள் வரத்தாகி, 11.௪௧ லட்சம் ரூபாய்க்கு விற்றது. புரட்டாசி மாதம் என்பதால் வழக்கத்தை விட கூடுதல் வாடிக்கையாளர்கள் வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை