உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பிளாஸ்டிக், குட்கா விற்ற 9 கடைகளுக்கு அபராதம்

பிளாஸ்டிக், குட்கா விற்ற 9 கடைகளுக்கு அபராதம்

பவானி: அம்மாபேட்டை பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளில், தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நடக்கிறதா? என்பது குறித்து, வட்டார உணவு பொருள் பாதுகாப்பு அலுவலர் சுதர்சன், வட்டார சுகாதார மேற்-பார்வையாளர் பிரகாஷ், சுகாதார ஆய்வாளர் ஜெகதீஷ்குமார், போலீசார் ஆய்வில் ஈடுபட்டனர்.அம்மாபேட்டை, ஊமாரெட்டியூர், சுந்தராம்பாளையம், லட்சுமி-புரம் பகுதிகளில் மளிகை கடை, பேக்கரி, இறைச்சி கடை உள்-பட பல்வேறு கடைகளில் ஆய்வு செய்ததில், 30 கிலோ புகை-யிலை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்-டது. தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனைக்கு பயன்ப-டுத்திய ஒன்பது கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி