| ADDED : ஜூலை 25, 2024 01:20 AM
கோபி: தேங்காய் நார் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தால், கோபி அருகே நேற்று பரபரப்பு ஏற்பட்டது.ஈரோடு மாவட்டம், கோபி அருகே சிறுவலுாரை சேர்ந்தவர் ராகுல், 25. இவர் சிறுவலுார் அருகே ஆயிபாளையத்தில், தேங்காய் நார் மற்றும் கயிறு தயாரிக்கும் ஆலை நடத்தி வரு-கிறார். நேற்று மதியம், 2:30 மணிக்கு ஆலையில் திடீரென தீப்-பற்றி எரிந்தது. பெருந்துறை மற்றும் கோபி தீயணைப்பு வீரர்கள் மற்றும் சிறுவலுார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், காற்று வேகமாக வீசியதால் தீ பரவி, அங்கு குவிக்கப்பட்டிருந்த தேங்காய் நார், அதன் மட்டைகள் மற்றும் இயந்திரங்களில் பற்றி எரிந்தது.தீயணைப்பு வீரர்கள், 4 மணி நேரம் போராடி மாலை, 6:30 மணிக்கு தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் தேங்காய் நார் சார்ந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. மின் கசிவு காரணமாக, தீ விபத்து நடந்திருப்பது போலீசார் விசார-ணையில் தெரியவந்தது. மேலும், தீ விபத்தில் சேதமடைந்த பொருட்களின் மதிப்பை, தீயணைப்பு துறையினரும், போலீ-சாரும் மதிப்பீடு செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால், சிறு-வலுார் பகுதியில் நேற்று மாலை பரபரப்பு ஏற்பட்டது.