உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தையல் இயந்திரம் வாங்கி தராததால் சிறுமி தற்கொலை

தையல் இயந்திரம் வாங்கி தராததால் சிறுமி தற்கொலை

ஈரோடு: ஈரோடு, மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த தொழிலாளி சுந்தரவடிவேல். இவரின் இளைய மகள் நிகிதா, 15; ஒன்பதாம் வகுப்பு வரை படித்து விட்டு, டைலரிங் பயிற்சி வகுப்பு சென்று வந்தார். மூன்று நாட்களாக பெற்றோரிடம், தையல் மிஷின் மற்றும் அதற்கான உபகரணங்களை வாங்கி தருமாறு கேட்டுள்ளார். நேற்று முன்தினம் இது தொடர்பாக தாயாரிடம் கேட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பிறகு அறைக்குள் சென்று துாக்கிட்டு கொண்டார். வெகு நேரமாக கதவை திறக்காததால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து சென்றனர். உள்ளே துாக்கில் தொங்கிய மகளை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !