உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / திம்பம் மலை பாதையில் உலா வரும் ஒற்றை யானை

திம்பம் மலை பாதையில் உலா வரும் ஒற்றை யானை

சத்தியமங்கலம்: திம்பம் மலைப்பாதையில், நடமாடும் ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் பீதியில் உள்ளனர்.சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில், ஏராளமான யானைகள் நடமாடுகின்றன. சத்தியமங்கலம்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் உணவு தேடி வந்த யானை, திம்பம் மலைப்-பாதையில் சாலை ஓரத்தில் அங்கும் இங்கும் நடமாடியது. வாக-னங்களில் செல்லும் பயணிகள் யானையை தங்களது மொபைல்-போன்களில் போட்டோ வீடியோ எடுத்து சமூக வலைதளங்-களில் பதிவிட்டனர்.திம்பம் மலைப்பாதையில் பகல் நேரங்களிலும், யானை நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு, வனத்து-றையினர் அறிவுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி