உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஓடும் ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம் செய்தவர் கைது

ஓடும் ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம் செய்தவர் கைது

ஈரோடு: கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த, 43 வயது திருமணமான பெண், சேலத்தில் வங்கியில் பணிபுரிகிறார். கடந்த, ௮ம் தேதி இரவு, சேலத்தில் இருந்து சொந்த ஊருக்கு புனேகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணித்தார். ஈரோடு ஸ்டேஷனில் ஏறிய ஒரு பயணி, பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். ஈரோடு ரயில்வே போலீசில் புகார் செய்தார். விசாரித்த போலீசார் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த மஹப், 33, என்பவரை கைது செய்தனர். கட்டட தொழிலாளியான அவரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை