மேலும் செய்திகள்
100 வார்டுகளில் சிறப்பு கூட்டம் இடங்கள் தேர்வு செய்ய உத்தரவு
19 hour(s) ago
ஈரோடு, நகராட்சி நிர்வாகத்துறை சார்பில், மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்.,களில் ஒவ்வொரு வார்டிலும் மக்கள் பங்கேற்புடன் வார்டு அளவிலான சிறப்பு கூட்டம் வரும், 27, 28, 29ல் நடத்தப்படுகிறது.இதன்படி ஈரோடு மாவட்டத்தில் பவானி, கோபி, சத்தியமங்கலம், புன்செய் புளியம்பட்டி, பெருந்துறை நகராட்சிகளில் சிறப்பு கூட்டம் நடக்கிகிறது. பவானி, சத்தி நகராட்சியில், 27, 28; கோபி நகராட்சியில், 28, 29; புன்செய் புளியம்பட்டி, பெருந்துறையில், 27, 28, 29 தேதிகளில் சிறப்பு வார்டு கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் குடிநீர் வழங்கல், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, சாலை, பூங்கா, மழைநீர் வடிகால் பராமரிப்பு போன்ற சேவை குறைபாடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும்.
19 hour(s) ago