சிறை கைதிகள் சிகிச்சை அறையில் திடீர் ஆய்வு
பெருந்துறை, பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், சிறை கைதிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அறை தனியாக உள்ளது. இங்கு கோவை சிறைத்துறை டி.ஐ.ஜி., ஜெயபாரதி, -எஸ்.பி., செந்தில்குமார்-, ஈரோடு எஸ்.பி., சுஜாதா- ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, மருத்துவ கல்லுாரி முதல்வர் ரவிக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.