உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோபியில் வாழைத்தார் ஏலத்துக்கு கூடுதல் கூடார வசதி அவசியம்

கோபியில் வாழைத்தார் ஏலத்துக்கு கூடுதல் கூடார வசதி அவசியம்

கோபியில் வாழைத்தார் ஏலத்துக்குகூடுதல் கூடார வசதி அவசியம் கோபி, நவ. 7-கோபி, வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார்களை வைக்க வசதியாக, கூடுதலாக கூடாரம் அமைக்க வேண்டும்.கோபி, வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் புதன்கிழமை வாழைத்தாரும், சனிக்கிழமை வாழைத்தார் மற்றும் தேங்காய் ஏலம் நடக்கிறது. பல்வேறு ஊர்களில் இருந்து, விவசாயிகள் வாழைத்தார்களை கொண்டு வருகின்றனர். அவைகளை அடுக்கி வைக்க வசதியாக, கூடாரத்துடன் கூடிய களம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சீசன் காலங்களில், வரத்து அதிகரிக்கும் சமயங்களில், வாழைத்தார்களை விவசாயிகள் வெயிலில் கிடத்த வேண்டியுள்ளது. இதனால் வாழைத்தார்களில் உஷ்ணம் ஏற்பட்டு, அதன் தன்மை மாறுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட சங்க நிர்வாகம் கூடுதலாக கூடாரம் அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை