உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கீழ்பவானியில் கூடுதல் தண்ணீர்; விபரம் வெளியீடு

கீழ்பவானியில் கூடுதல் தண்ணீர்; விபரம் வெளியீடு

ஈரோடு: கீழ்பவானி வாய்க்காலில் கூடுதல் தண்ணீர் செல்வதை, நீர் வளத்துறை அதிகாரிகள் விபரத்துடன் வெளியிட்டனர்.ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில், 1 லட்சத்து, 3,500 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இதற்காக கடந்த ஆக., 15ல் தண்ணீர் திறக்கப்பட்டது. ஈரோடு, திருப்பூர், கரூர் என மூன்று மாவட்ட விவசாயிகள் பயன் பெறுகின்றனர்.பிரதான வாய்க்காலில் வினாடிக்கு, 2,300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் நிர்ணயிக்கப்பட்ட முழு அளவில் தண்ணீர் திறக்காததால், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாமல் இருப்பதாக, பாசன விவசாயிகளில் ஒரு தரப்பினர் குற்றம் சாட்டி வந்தனர்.இதற்கு ஆதாரப்பூர்வமாக பதிலளித்து, நீர் வளத்துறையினர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கீழ்பவானி பிரதான கால்வாயில் நிலத்தடி நீர் பிரிவு மூலம், தண்ணீர் அளவு கணக்கீடு செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. ஒவ்வொரு உபகோட்டத்துக்கும் வாய்க்கால் எல்லையில் நாள்தோறும் குறிப்பிட்ட இடைவெளியில் கண்காணிக்கப்படுகிறது.இதன்படி கீழ்பவானி பிரதான கால்வாயில், 50வது மைல் துாரத்தில் கடந்தாண்டு வினாடிக்கு, 1,472 கன அடி தண்ணீர் சென்றது. தற்போது, 1,502 கனஅடி தண்ணீர் செல்கிறது. அதுபோல, 62வது மைலில் கடந்தாண்டு, 800 கனஅடி தண்ணீர் சென்றது. தற்போது, 816 கன அடி தண்ணீர்; 74வது மைலில் கடந்தாண்டு, 350 கனஅடி, தற்போது, 380 கனஅடியும், பிரதான கால்வாய், 89 வது மைலில் கடந்தாண்டு, 260 கன அடி, தற்போது, 283 கனஅடியும் செல்கிறது.அதுபோல, சென்னசமுத்திரம் கிளை வாய்க்காலில் கடந்தாண்டு, 300 கனஅடி தண்ணீர் சென்ற நிலையில் தற்போது, 322 கன அடி தண்ணீர் செல்கிறது. விவசாயிகள் இதுபற்றி, தொடர்புடைய பிரிவு அலுவலகத்தை அணுகி, நேரடியாக தகவல் பெறலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை