உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு இசைப்பள்ளியில் மே 2ல் சேர்க்கை துவக்கம்

அரசு இசைப்பள்ளியில் மே 2ல் சேர்க்கை துவக்கம்

ஈரோடு:ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவ, மாணவியர் சேர்க்கை மே, 2ல் துவங்க உள்ளது, அரசு இசைப்பள்ளியில், 12 முதல், 25 வயதுக்கு உட்பட்டோர் சேரலாம். குரலிசை, பரத நாட்டியம், வயலின், மிருதங்கம் கலைகளுக்கு, ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தவில், நாதசுரம், தேவாரம் கலைகளுக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும். இசைப்பள்ளி படிப்பின் கால அளவு, 3 ஆண்டுகள். இங்கு பயிலும் மாணவர்களுக்கு மாதம், 400 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இருபாலருக்கும் விடுதி வசதி உண்டு. கோவில்களில் தேவாரம் ஓதுவார் பணியில் சேர, இப்பள்ளியில் தேவாரம் இசை பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க அரசு ஆணையிட்டுள்ளது.கலை ஆர்வமுள்ள மாணவ, மாணவியர், ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மே, 2 முதல் சேரலாம். கூடுதல் விபரத்துக்கு 'தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, பி.பெ.அக்ரஹாரம், பவானி சாலை, ஈரோடு-638001' என்ற முகவரி; தொலைபேசி போன்: 0424 2294365, மொபைல் எண்-94872-47205ல் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை