வளர்ச்சி திட்டப்பணிகள் அமைச்சர் ஆலோசனை
வளர்ச்சி திட்டப்பணிகள்அமைச்சர் ஆலோசனைஈரோடு, அக். 18-மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து துறை சார்ந்த உயர் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, ஆலோசனை நடத்தினார். புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் உட்பட ஒவ்வொரு துறையிலும் அந்தந்த துறை சார்ந்த வளர்ச்சி திட்டப்பணிகள், மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியவை குறித்து ஆய்வு செய்தார். 15வது நிதிக்குழு மானியத்தில் நடந்து வரும் பணிகள், பிறப்பு - இறப்பு விகிதம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.