உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நெல் பயிரில் இலை சுருட்டு, மடக்கு புழு தாக்குதல் கட்டுப்படுத்த வேளாண்துறை அறிவுறுத்தல்

நெல் பயிரில் இலை சுருட்டு, மடக்கு புழு தாக்குதல் கட்டுப்படுத்த வேளாண்துறை அறிவுறுத்தல்

நெல் பயிரில் இலை சுருட்டு, மடக்கு புழு தாக்குதல்கட்டுப்படுத்த வேளாண்துறை அறிவுறுத்தல்ஈரோடு, டிச. 1-நெற்பயிரில் இலை சுருட்டு, மடக்கு புழுக்களின் பாதிப்பை கட்டுப்படுத்த, ஈரோடு மாவட்ட வேளாண் அறிவியல் நிலைய தொழில் நுட்ப வல்லுனர் சரவணகுமார் யோசனை தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பில் கூறியதாவது: தற்போது நிலவும் குறைந்தபட்ச வெப்ப நிலை, அதிக ஈரப்பதம், நெற்பயிரில் இலை சுருட்டு புழு தாக்குதலுக்கு ஏதுவாகிறது. இவற்றை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்த வேண்டும். இப்புழுக்கள் பயிரில் இருந்தால், இலைகள் நீளவாக்கில் சுருட்டப்பட்டு, மெல்லிய இலைகளால் பின்னப்பட்டிருக்கும்.சுருட்டப்பட்ட இலைகளுக்குள் புழுக்கள் பச்சையத்தை சுரண்டி உண்பதால், இலைகள் வெண்மையாகி விடும். தாக்குதல் அதிகரித்தால், இலைகள் காய்ந்து சருகாகி, பயிர் வளர்ச்சி குன்றும். இப்பூச்சிகளை கட்டுப்படுத்த வரப்புகளில் களைகளை நீக்கி, சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பூச்சி தாக்குதலின்போது தழைச்சத்து உரமிடுவதை தவிர்க்கலாம். டிரைக்கோகிரம்மா லைகோனிஸ் எனும் முட்டை ஒட்டுண்ணியை ஏக்கருக்கு, 3 சி.சி., வீதம், 15 நாட்கள் இடைவெளியில், 3 முறை கட்ட வேண்டும்.இரவு நேரம் விளக்கு பொறிகளை அமைத்து, தாய் அந்துப்பூச்சியை கவர்ந்து அழிக்கலாம். தாக்குதல் அதிகரித்தால், 5 சதவீத வேப்பங்கொட்டைச்சாறு கரைசலை, ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்க வேண்டும். தாக்குதல் தீவிரமடையும்போது, புரோபனோபாஸ், 400 மி.லி., என்ற அளவில் தெளிக்க வேண்டும். பூச்சிகளின் தாக்குதலுக்கு ஏற்ப, இம்முறைகளை கையாள்வதால், இலைச்சுருட்டு புழுக்களின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி