அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்
அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்பெருந்துறை, டிச. 11-பெருந்துறை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம், சீனாபுரத்தில் நடந்தது. செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் வேலு வரவேற்றார். ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் கருப்பணன், கட்சி அமைப்பு செயலாளர் சிவசாமி, பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., பொன்னுதுரை, ஒன்றிய செயலாளர்கள் விஜயன், ரஞ்சித்ராஜ், நகர செயலாளர்கள் கல்யாணசுந்தரம், துரைசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் அருணாசலம், ஒன்றிய துணை செயலாளர் அன்பரசு, ஒன்றிய அவைத் தலைவர் பாலசுப்பிரமணியம் உட்பட பல கலந்து கொண்டனர்.