அ.தி.மு.க., சார்பில் திண்ணை பிரசாரம்
சென்னிமலை: திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அம்மா பேரவை சார்பாக, சென்னிமலையில் திண்ணை பிரசாரம் நடந்தது. குமரன் சதுக்கத்தில் இருந்து ஊர்வலமாக சென்று ஓட்டப்பாறை பஞ்., பகுதிகளில், அ.தி.மு.க., ஆட்சி சாதனைகளையும், தற்போதைய தி.மு.க., ஆட்சியில் ஏற்பட்டுள்ள இன்னல்களை குறிப்பிட்டு அச்சடிக்கப்பட்ட நோட்டீசை, முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் வீதிவீதியாக சென்று மக்களிடம் வழங்கினார். அவருடன் சென்னிமலை ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் கோபாலகிருஷ்ணன், நகர செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் துரைசாமி உட்பட நுாற்றுக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.