அம்புசேர்வை விழா ரத்து
புன்செய்புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டியை அடுத்த கோவில்புதுாரில் கரிவரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் விஜயதசமி பண்டிகைக்கு மறுநாள் அம்புசேர்வை திருவிழா விமர்சையாக நடப்பது வழக்கம். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பர். கோவிலில் தற்போது திருப்பணி நடப்பதால், இன்று நடக்கவிருந்த நடப்பாண்டு அம்புசேர்வை விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. பெருமாளுக்கு சிறப்பு பூஜை மட்டும் நடக்கும் என்று, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.