மேலும் செய்திகள்
கிணற்றில் தவறி விழுந்த முதியவர் பலி
13-Sep-2024
கிணற்றுக்குள் தவறிவிழுந்த முதியவர் பலிபெருந்துறை, செப். 29--பெருந்துறை அடுத்த, கல்லகுளத்தை சேர்ந்தவர் முருகசாமி, 83, விவசாயி. இவருக்கு கண் பார்வை சரி வர தெரியாது. நேற்று முன்தினம் மாலை, ஓடிக் கொண்டு இருந்த மோட்டாரை நிறுத்த சென்றார். அப்போது தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார். பெருந்துறை தீயணைப்பு வீரர்கள், கிணற்றுக்குள் விழுந்த முருகசாமியை மீட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து, பெருந்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
13-Sep-2024