மேலும் செய்திகள்
மகுடேஸ்வரருக்கு அன்னாபிஷேகம்
15-Nov-2024
சிவாலயங்களில் அன்னாபிஷேகம்சென்னிமலை, நவ. 16-ஐப்பசி மாத பவுர்ணமியை ஒட்டி, சிவாலயங்களில் நேற்று மூலவருக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது.இதன்படி சென்னிமலை கைலாசநாதர் கோவிலில், கைலாசநாதர் திருமேனிக்கு, 50 கிலோ அரிசி மற்றும் 30 கிலோ காய்கறி, பட்சணங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இதேபோல் முருங்கத்தொழுவு பிரமலிங்கேஸ்வரர் கோவிலில், 25 கிலோ அரிசி, 20 கிலோ காய்கறிகளால், மூலவருக்கு அன்னாபிஷேகம் செய்து, சிறப்பு பூஜை நடந்தது.இதேபோல் அந்தியூர், பெரியேரிக்கரை, தேவேந்திரப்பன் கோவில், கோபி, பச்சமலை முருகன் கோவில், பவளமலை முத்துக்குமாரசாமி கோவில், பாரியூரில் அமரபணீஸ்வரருக்கும், அன்னத்தால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.* ஈரோட்டில் ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், 108 கிலோ பச்சரிசி சாதத்தில் மூலவருக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. இதேபோல் மகிமாலீஸ்வரர் கோவில், கருங்கல்பாளையம் சோழீஸ்வரர் மற்றும் மாதேஸ்வரன் கோவிலிலும் அன்னாபிஷேகம் நடந்தது.அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை, அனைத்து ஜீவராசிகளுக்கும் சென்று சேரும் வகையில், வனத்தில் பறவைகள், குளத்தில் மீன்களுக்கு துாவப்பட்டு, பின் பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது.* திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஊதியூரை அடுத்த கொங்கண சித்தர் கோவில், மடவிளாகம் ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், அகிலாண்டபுரம் அகிலாண்டேஸ்வரர் கோவில், காடையூர் காடேஸ்வரர் கோவில், மருதுறை பட்டீஸ்வர் கோவில், நத்தக்காடையூர் ஜெயம்கொண்டேஸ்வரர் கோவில், கம்பம் மாதேசிலிங்கம் கோவிலில்; வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவில், ஓலப்பாளையம் விக்ரம சோழீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் அன்னாபிஷேக விழா நடந்தது.
15-Nov-2024