உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சமூக சொத்து பறிபோவதை தடுக்க காத்திருப்பு போராட்டம் அறிவிப்பு

சமூக சொத்து பறிபோவதை தடுக்க காத்திருப்பு போராட்டம் அறிவிப்பு

ஈரோடு, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது:ஈரோடு மாவட்டம் சென்னிமலை காந்தி நகரில் பல ஏக்கர் நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி செய்துள்ளனர். இதுபற்றி ஆவணங்கள் வழங்கியும் நடவடிக்கை எடுக்கவில்லை.சென்னிமலை அட்டவணை பிடாரியூரில், 250 இலங்கை தமிழர் மறுவாழ்வுக்காக ஒதுக்கிய நிலத்தையும் சிலர் போலி ஆவணங்கள் மூலம் மாற்றம் செய்துள்ளனர்.பெருந்துறை சிப்காட்டில் சாயக்கழிவு, ஆலைக்கழிவால் மாசுபாடு ஏற்பட்டுள்ளதை தடுக்க நடவடிக்கை இல்லை.சென்னிமலை அருகே எக்கட்டாம்பாளையம் மாமாங்கம் குளத்துக்கு செல்லும் பகுதியில், கனிம வள கொள்ளையை தடுக்கவும், கொள்ளை போன கனிம வளத்துக்கு இழப்பீடு பெறவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுபோல் பல சம்பவங்கள் மீது நடவடிக்கை கோரி, இன்று முதல் பெருந்துறை தாலுகா அலுவலகம் முன், தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளோம். பெருந்துறைக்கு முதல்வர் நாளை (11ம் தேதி) வரும் நிலையில், இந்த காத்திருப்பு போராட்டம் நல்ல தீர்வை தரும்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ