உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரவுடி கொலையில் மேலும் ஒருவர் சரண்

ரவுடி கொலையில் மேலும் ஒருவர் சரண்

ஈரோடு:சேலம், கிச்சிபாளையத்தைச் சேர்ந்த ரவுடி ஜான், 30, நசியனுார் அருகே 19ம் தேதி பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டார்.இது தொடர்பாக, சேலம், கிச்சிபாளையத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், பார்த்திபன், அழகரசன், சேதுவாசன், சிவக்குமார், பெரியசாமி ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சலீம், ஜீவகன், கோகுல சுகவனேஸ்வரன் என மூன்று பேர், ஈரோடு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.இந்நிலையில், சேலம், கிச்சிபாளையம் மொன்னையன் துரைசாமி, 24, கொலை தொடர்பாக, ஈரோடு குற்றவியல் நீதிமன்ற எண் - 3ல் மாஜிஸ்திரேட் அப்சல் பாத்திமா முன் நேற்று சரணடைந்தார். சரணடைந்தவர்களை கஸ்டடி எடுக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி