வேட்டை தடுப்பு காவலர் பாம்பு கடித்ததில் காயம்
சத்தியமங்கலம்: கடம்பூர்மலை பசுவனாபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலை-யத்தில், நேற்று முன்தினம் இரவு நாகப்பாம்பு புகுந்து விட்டதாக, கடம்பூர் வனத்துறையினருக்கு தகவல் வந்தது. அங்கு சென்ற வேட்டை தடுப்பு காவலர் ராமசாமி பாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபட்டார். எதிர்பாராத விதமாக வலது கையில் பாம்பு கடித்-ததில் காயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடம்பூர் வனத்துறையில் பாம்பு பிடிக்க போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததே விபத்துக்கு காரணம் என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.