உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பஸ் வசதி கோரி முறையீடு

பஸ் வசதி கோரி முறையீடு

ஈரோடு, நசியனுார் அருகே ராயபாளையத்தை சேர்ந்த மக்கள் பழனிசாமி தலைமையில் வந்து, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மனு வழங்கி கூறியதாவது:ராயபாளையம் பகுதி, ஈரோடு மாநகராட்சியை ஒட்டி அமைந்துள்ளது. இங்குள்ளவர்கள் அனைத்து தேவை, வேலை, படிப்புக்கும் ஈரோடு மாநகரப்பகுதிக்கு சென்று வர வேண்டி உள்ளது.இப்பகுதிக்கு காலை, 7:00 மணிக்கு ஒரு பஸ் வந்து செல்கிறது. மற்ற நேரங்களில் தேவையான அளவு பஸ் வசதி இல்லை. 4 கி.மீ., துாரம் நடந்து சென்று பஸ் ஏற வேண்டும்.இரவு நேரங்களில் பஸ் ஏற செல்வதும், இறங்கி நடந்து வருவதும் சிரமமாக உள்ளது. பொது போக்குவரத்தை மக்கள் வசிக்கும் பகுதிக்கு இயக்கும் நோக்குடன், புதிய பஸ்கள் இயக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை