சாலை, மின் விளக்கு வசதி கோரி முறையீடு
ஈரோடு, பெருந்தலையூர் குட்டிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் தலைமையிலான ஊர்மக்கள், ஈரோடு கலெக்டரிடம் நேற்று அளித்த மனு:குட்டிபாளையம் திருவள்ளுவர் சிலையில் இருந்து ஆற்றுக்கு செல்லும் வரையிலான சாலை குண்டும், குழியுமாக உள்ளது. பள்ளி வாகனங்கள் செல்லும் நிலையில் சாலை மிக மோசமான நிலையில் உள்ளது.எனவே சாலை வசதி அமைக்க வேண்டும். மேலும் மாரியம்மன் கோவில் வீதியில் இருந்து, ஆற்றுக்கு செல்லும் பாதை வரை மின் விளக்கு வசதி அமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.