உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பள்ளிகளில் பி.டி.ஏ., மூலமாவது இரவு காவலர்களை நியமியுங்கள் மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டத்தில் எம்.பி., வலியுறுத்தல்

பள்ளிகளில் பி.டி.ஏ., மூலமாவது இரவு காவலர்களை நியமியுங்கள் மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டத்தில் எம்.பி., வலியுறுத்தல்

ஈரோடு, ஜூஈரோட்டில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம், தலைவர் மற்றும் ஈரோடு தி.மு.க., - எம்.பி., பிரகாஷ் தலைமையில் நடந்தது. எம்.பி.,க்கள் கே.சுப்பராயன், அந்தியூர் செல்வராஜ், கலெக்டர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்ட விவாதம் வருமாறு:எம்.பி., பிரகாஷ்: மத்திய, மாநில அரசின் நிதி மூலமான பணிகள், பிற பொது பிரச்னைகள் குறித்து கடந்த கூட்டத்தில் எழுப்பப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. பெட்டிஷன்களே வராத நாள்தான், ஆட்சியின் சிறந்த நோக்கம் நிறைவடைந்துள்ளதாகும், என துணை முதல்வர் உதயநிதி தெரிவிப்பார். அதற்காக பணி செய்வோம்.ஈரோடு மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின்: ஈரோடு மாநகராட்சி மண்டபத்தை நவீனமாக்க கோரி இருந்தனர். அதற்கான திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. பொது நிதி குறைவாக உள்ளதால், பணி தாமதமாகிறது.எம்.பி., அந்தியூர் செல்வராஜ்: மாவட்ட வேளாண் குழு பல ஆண்டாக மாற்றப்படவில்லை. புதிய நபர்கள் நியமிக்கப்பட வேண்டும். பாசன சபைகளுக்கு முறையான தேர்தல் நடத்த வேண்டும்.முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ்: சத்தியமங்கலம் உட்பட சில அரசு பள்ளிகளில் இரவு நேர காவலாளி இல்லை என புகார் வந்தது. மாநில அளவில் பெரும்பாலான பள்ளிகளில் இரவு நேர காவலாளிகள் இல்லை. அரசுதான் நியமிக்க வேண்டும். நாமாக நியமிக்க வழி இல்லை. பிற அலுவலர்களை இரவில் காவலாளியாக நியமிக்க இயலாது.எம்.பி., பிரகாஷ்: மாவட்ட நிலை அதிகாரி, அரசுதான் நியமிக்க வேண்டும் என கூறக்கூடாது. அப்பள்ளி பி.டி.ஒ., மூலம் ஒருவரை நியமிக்கலாம். தேவை அடிப்படையில் எந்தெந்த பள்ளிக்கு காவலாளி தேவையோ, அதற்கேற்ப நியமித்து கொள்ள முயலுங்கள். டெல்டா மாவட்ட பள்ளியில் ஒரு சம்பவம் நடந்ததால், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், 'விரைவில் பள்ளிகளுக்கு இரவு நேர காவலாளி நியமிக்க முயற்சி மேற்கொள்ளப்படும்' என தெரிவித்துள்ளார். விரைவில் தீர்வு காணப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.எம்.எல்.ஏ.,க்கள் அந்தியூர் வெங்கடாசலம், மொடக்குறிச்சி சரஸ்வதி, ஈரோடு கிழக்கு சந்திரகுமார், மேயர் நாகரத்தினம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிரியா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை