உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பாராட்டு விழா
தாராபுரம்: மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றும், தாராபுரம் பகுதியை சேர்ந்த நீதிபதி கிருஷ்ணகுமாருக்கு, தாரா-புரம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், தாராபுரத்தில் நேற்று பாராட்டு விழா நடந்தது. தலைவர் கலைச்செழியன் தலைமை வகித்தார். அகில இந்திய பார் கவுன்சில் முன்னாள் தலைவர் கார்வேந்தன், நீதியரசர்கள் பாரதிதாசன், கல்-யாணசுந்தரம் உட்பட பலர், வாழ்த்துரை வழங்கினர். விழாவில் வாழ்த்துரை வழங்கி உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் பேசினார். இதை தொடர்ந்து கிருஷ்ணகுமார் ஏற்புரை நிகழ்த்தினார். தாரா-புரம் வழக்கறிஞர் சங்க செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார். நிகழ்வில் பல்வேறு நீதி அரசர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், கிருஷ்ணகுமாருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.