உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 60 வயது தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் சிக்கல்களை களைய உரிய நடவடிக்கை

60 வயது தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் சிக்கல்களை களைய உரிய நடவடிக்கை

ஈரோடு:''அறுபது வயதான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் பெறுவதில் உள்ள சிக்கல்களை களைய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என, அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.ஈரோட்டில் தொ.மு.ச. சார்பில் மே தின ஊர்வலம் நேற்று மாலை நடந்தது. வ.உ.சி. பூங்காவில் ஊர்வலம் துவங்கியது. இதை வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து ஆட்டோ தொழிற்சங்கம் மற்றும் சுமை துாக்கும் தொழிலாளர்களுக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான நல திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.இதில் கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ சந்திர குமார், மாநகர செயலாளர் சுப்பிரமணியம், துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி மண்டல தலைவர் பழனிச்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.பின்னர் அமைச்சர் முத்துசாமி, நிருபர்களிடம் கூறியதாவது:ஈரோடு மாவட்டத்துக்கு முதல்வர், துணை முதல்வர் பல்வேறு திட்டங்களை கொடுத்துள்ளனர். மதுவிலக்கு துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தி புதிய நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஓய்வூதியம், 1,000 ரூபாயில் இருந்து, 1,200 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். 60 வயதான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் பெறுவதில் உள்ள சிக்கல்களை களைய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.இதே போல் சி.ஐ.டி.யு. சார்பில் ஜி.ஹெச் ரவுண்டானாவில் நேற்று மாலை பேரணி துவங்கியது. ஸ்வஸ்திக் கார்னர் வழியாக வீரப்பன்சத்திரம் பஸ் ஸ்டாப் சென்ற ஊர்வலம் அங்கு நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ