மேலும் செய்திகள்
மாவட்டத்தில் 8 காவல் நிலையங்கள் தரம் உயர்வு
07-Jun-2025
ஈரோடு, ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - குரூப்-1 முதல் நிலை எழுத்து தேர்வு இன்று நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில், 29 தேர்வு மையங்களில், 7,651 பேர் தேர்வு எழுதவுள்ளனர். தேர்வை கண்காணிக்க 6 நடமாடும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், 29 அலுவலர்கள் இடம் பெற்றுள்ளனர். தேர்வு மையங்கள் உள்ள இடங்கள் வழியாக செல்லும் பஸ்கள், குறிப்பிட்ட நிறுத்தங்களில் நின்று செல்ல அரசு போக்குவரத்துக்கு, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தேர்வுக்கான வினாத்தாள், கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட கருவூலத்தின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு, போடப்பட்டுள்ளது. இன்று காலை, பாதுகாப்பு வாகனத்தில் அந்தந்த மையங்களுக்கு வினாத்தாள் அனுப்பி வைக்கப்படும்.
07-Jun-2025