உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பழுதடைந்த வீடு மறுகட்டுமானம் கிராமசபை கூட்டத்துக்கு ஏற்பாடு

பழுதடைந்த வீடு மறுகட்டுமானம் கிராமசபை கூட்டத்துக்கு ஏற்பாடு

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில், முதல்வரின் வீடுகள் மறுகட்டுமான திட்டத்தில், கடந்த, 2000-01ம் ஆண்டு வரை, கிராமப்புறங்களில் பல்வேறு அரசு திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகளின் கள நிலைமை அடிப்படையில் பழுதடைந்த வீடுகள், மறுகட்டுமானம் செய்திடும் பொருட்டு பயனாளிகள் தேர்வு, திட்ட செயல்பாடுகள் குறித்த திட்டமிடப்படுகிறது.கிராம அளவிலான குழு மூலம், தேர்வு செய்யப்பட்ட தகுதியான பயனாளிகளுக்கு ஒப்புதல் வழங்க இன்று (5) சிறப்பு கிராமசபை கூட்டம் காலை, 11:00 மணி அளவில் நடக்க உள்ளது. அனைத்து பஞ்.,களிலும் கிராமசபை கூட்டம் நடப்பதை, யூனியன் அளவிலான பற்றாளர்கள் கண்காணிக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !