அரசு கல்லுாரியில் கலை திருவிழா
காங்கேயம், காங்கேயம் அருகே முள்ளிபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 'கலையால் கல்வி செய்வோம்' எனும் தலைப்பில், 32 விதமான கலைப்போட்டி கடந்த, 16ம் தேதி துவங்கி, 22ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதில் முதல் கட்டமாக, 20 போட்டி நடத்தப்பட உள்ளது. கவிதை எழுதுதல், சிறுகதை எழுதுதல், பேச்சுப்போட்டி, நெருப்பில்லாமல் சமையல் போட்டி, பாட்டு போட்டி இதுவரை நடந்துள்ளது. வரும் நாட்களில் சிலம்பாட்டம், இசைக்கருவி வாசித்தல், புதையலை தேடுதல் போன்ற போட்டி நடைபெற உள்ளதாக கல்லுாரி முதல்வர் ஜெயந்தி தெரிவித்தார்.