பாரியூர், பச்சைமலையில் ஆருத்ரா விழா அமோகம்
கோபி: கோபி அருகே பச்சை மலையில், சிவகாமி அம்பாள் சமேத நட-ராஜ சுவாமி கோவிலில், ஆருத்ரா தரிசனம், மகா அபிஷேகம் மற்றும் 108 சங்காபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி அதி-காலை, 4:00 மணிக்கு, நடராஜருக்கு மகா ேஹாமம், மகா அபி-ஷேகம், 108 சங்காபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதேபோல் பாரியூர் அமரபணீஸ்வரர் கோவிலில் திருவாதிரை விழாவையொட்டி அதிகாலை, 5:00 மணிக்கு நடராஜ-ருக்கு மகன்யாச அபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து சுவாமி திருவீதி உலா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.*பெருந்துறை சோழீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா நேற்று காலை நடந்தது. முன்னதாக அதிகாலை, 4:30 மணிக்கு சோழீஸ்வரருக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. காலை, 9:00 மணியளவில் நடந்த சுவாமி திருவீதியுலாவில், நுாற்-றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் மக்கள் கலந்து கொண்டனர்.பவானியில் திருவீதியுலாஆருத்ரா தரிசன விழாவையொட்டி, பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், நேற்று அதிகாலை சிவகாமி உடனமர் நடராஜ பெருமானுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதையடுத்து ஊஞ்சல், ஊடல், உற்சவம் நடந்தது. அதன்பின் நகரின் முக்கிய வீதிகளில், அலங்கரிக்கப்-பட்ட தேரில் நடராஜ பெருமான், திருவீதியுலா நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.