உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆசனுார் டி.எப்.ஓ., மாற்றம்

ஆசனுார் டி.எப்.ஓ., மாற்றம்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட ஆசனுார், அரேபாளையம், ஒங்கல்வாடி உள்ளிட்ட பகுதியில், கடந்த இரண்டு மாதங்களாக ஆடு, மாடு, நாய், எருமை, உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கால் நடைகளை சிறுத்தை வேட்டையாடி வந்துள்ளது. பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதையடுத்து, வனத்துறை சார்பில் சிறுத்தை கூண்டில் சிக்கியதாக போட்-டோவை வெளியிட்டு பிடித்து விட்டோம் என்றனர். பிடிபட்ட சிறுத்தையை காட்டவில்லை என குற்றம் சாட்டிய மக்கள், கடந்த 23ம் தேதி தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரம் தலைமையில், 500க்கும் மேற்-பட்டோர் சாலை மறியல், முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போதைக்கு சமாதானம் செய்து போராட்டத்தை கலைத்தனர். இந்நிலையில் ஆசனுார் டி.எப்.ஓ., யோகேஷ் குமார் கார்க், நாகர்கோவில் அரசு ரப்பர் கழக பொது மேலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை