சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு விருது
ஈரோடு :ஒவ்வொரு ஆண்டும், அதிக வழக்குப்பதிவு மற்றும் தீர்வு காணுதல் உட்பட பல்வேறு பிரிவுகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ஸ்டேஷன் சிறந்ததாக தேர்வு செய்யப்படும். அந்த ஸ்டேஷனுக்கு சுதந்திர தினவிழாவில் முதல்வர் கோப்பை வழங்கப்படும்.இதன்படி, 2023ல் சிறந்த ஸ்டேஷனாக மாநகர, மாவட்ட அளவில் தலா, ஒரு ஸ்டேஷன் தேர்வானது. இதில் மூன்றுக்கு மட்டும், சுதந்திர தினவிழாவில் முதல்வர் ஸ்டாலின் கோப்பை வழங்கினார்.மீதி ஸ்டேஷன்களின் பொறுப்பு அதிகாரி, சென்னை டி.ஜி.பி., அலுவலகத்தில் இன்று நடக்கும் நிகழ்வில் முதல்வர் கோப்பையை பெற அழைக்கப்பட்டுள்ளனர். இதன்படி ஈரோடு சூரம்பட்டி ஸ்டேஷன் உள்பட, 46 ஸ்டேஷன் பொறுப்பாளர்கள் கோப்பை மற்றும் சான்றிதழ் பெறவுள்ளனர்.