உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நம்பியூர் குமுதா பள்ளி மாணவருக்கு விருது

நம்பியூர் குமுதா பள்ளி மாணவருக்கு விருது

ஈரோடு : இந்திய தொழில் நுட்பத்துறை மூலம் பள்ளி மாணவர்களுக்கு, 2023-24ம் ஆண்டுக்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருதுகளுக்கான கட்டுரை சமர்ப்பித்தல் இணைய வழி மூலமாக நடந்தது. இதில் ஈரோடு மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பள்ளி மாணவர்கள் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இதில் நம்பியூர் குமுதா பள்ளி ஆறாம் வகுப்பு மாணவன் சாய் சர்வேஷ் சமர்ப்பித்த, கசிவுநீர் சேகரிப்பு ஆய்வு கட்டுரை சிறந்த ஆய்வு கட்டுரையாக தேர்வு செய்யப்பட்டு, ௧0 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. மாணவனை பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணை தாளாளர் சுகந்தி ஜனகரத்தினம், செயலர் டாக்டர் அரவிந்தன், துணை செயலர் டாக்டர் மாலினி, விளையாட்டு இயக்குனர் பால பிரபு, முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி உள்ளிட்டோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி