உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் குறித்து விழிப்புணர்வு

கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் குறித்து விழிப்புணர்வு

காங்கேயம்: கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் குறித்து, விசைத்தறி உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம், வெள்ளகோவில் அருகே தீர்த்தாம்பாளையத்தில் நடந்தது. தீர்த்தம்பாளையம் ஊர் தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார்.ஈரோடு தேர்வு நிலை இளநிலை தொழில்நுட்ப உதவி, அமலாக்க ஆய்வாளர் ஜெகதீசன் பேசியதாவது: கைத்தறிக்காக ஒதுக்கப்பட்டு அதில் சில விதிமுறைகளுக்கு உட்பட்ட சேலை, வேஷ்டி, டவல், லுங்கி, பெட்சீட், ஜமக்காளம், டிரஸ் மெட்டீரியல், கம்பளி சால்வை, உல்லன், ஸ்வீட் சந்தார் ஆகிய 11 ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்யக்கூடாது. இதை மீறும் விசைத்தறி உரிமையாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பேசினார்.மத்திய அரசின் நலத்திட்டம், மாநில அரசின் நலத்திட்டம் மற்றும் தொழிலாளர் நல வாரியம் குறித்து கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் ஈரோடு கைத்தறி அலுவலர்கள் சங்கீதா, தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ