பார்மஸி கல்லுாரியில் விழிப்புணர்வு கூட்டம்
ஈரோடு, ஈரோடு காலேஜ் ஆப் பார்மஸி கல்லுாரியில், டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை, தி ஈரோடு காலேஜ் ஆப் பார்மஸி கல்லுாரி இணைந்து, விழிப்புணர்வு பணிமனை செயற்குழு கூட்டம் நடநத்து. கல்லுாரி தாளாளர் நடராஜன் தலைமை உரையாற்றினார். கல்லுாரி முதல்வர் சம்பத்குமார் சிறப்புரையாற்றினார். மோகன், குருஷங்கர் செல்வம், கோபிநாத், தனபிரகாஷ், டாக்டர் கண்ணன் ஆகியோர், ஸ்டார்ட் அப் சூழ்நிலை மற்றும் மருத்துவத்துறையில் நடைமுறை பயன்பாடு குறித்து உரையாற்றினர். நிகழ்ச்சியில் வினா--விடை மற்றும் கருத்துக்கேட்பு என கலந்துரையாடல் நடந்தது. ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள, 17 மருத்துவம் மற்றும் பார்மஸி கல்லுாரிகள், மருத்துவம் தொடர்புடைய கல்வி நிறுவனங்களிலிருந்து, 350க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். கல்லுாரி துணை முதல்வர் சரவணன் நன்றி கூறினார்.