மேலும் செய்திகள்
டெங்கு காய்ச்சலுக்கு குழந்தை உயிரிழப்பு?
16-Jul-2025
பெருந்துறை, பெருந்துறை அருகே, பிளாஸ்டிக் டிரம்மில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்தது. பீஹார் மாநிலம், மடத்துபனிகாட் அடுத்த, ஆதிபனிகாட்டை சேர்ந்த ரோகித்குமார், கூலி தொழிலாளி. இவருக்கு ஆண் மற்றும் ரூயி, 3, என்ற பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் குடும்பத்துடன், பெருந்துறை அடுத்த சீலம்பட்டியில் தங்கியபடி கூலி வேலைக்கு சென்று வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, அனைவரும் சாப்பிட்டு கொண்டு இருந்தனர். குழந்தை ரூயி சாப்பிட்டு விட்டு, கை கழுவ சமையல் அறைக்கு சென்றது. அப்போது அங்கிருந்த பிளாஸ்டிக் டிரம்மில் இருந்த தண்ணீரில் கை கழுவும் போது, தவறி உள்ளே விழுந்துள்ளது. ஆபத்தான நிலையில் குழந்தையை, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. பெருந்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
16-Jul-2025