உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பயணிகளை ஏற்ற மறுப்பு பஸ்கள் மீது புகார்

பயணிகளை ஏற்ற மறுப்பு பஸ்கள் மீது புகார்

தாராபுரம், கோவை சிங்காநல்லூரில் இருந்து கிளம்பும் பஸ்கள், பழனியில் இருந்து ஈரோடு செல்லும் பஸ்களிலும், தாராபுரம் செல்லும் பயணிகளை, நடத்துனர்கள் ஏற்ற மறுக்கின்றனர்.இரு தினங்களுக்கு முன், பழனியில் இவ்வாறு ஒரு சம்பவம் நடந்ததால், பஸ்ஸை மக்கள் சிறைபிடித்தனர். இந்நிலையில் தாராபுரம் பா.ஜ., நகர தலைவர் ரங்கநாயகி, நிர்வாகிகள் லோகேஷ், செல்வராஜ் ஆகியோர், தாராபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில், நேற்று மனு அளித்தனர்.அதில், பயணிகளை ஏற்ற மறுக்கும், பஸ் கண்டக்டர், டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை