உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வீட்டில் கட்டில், மெத்தை, அலமாரி தீக்கிரை

வீட்டில் கட்டில், மெத்தை, அலமாரி தீக்கிரை

ஈரோடு, :ஈரோடு, வீரப்பன்சத்திரம் மேட்டூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தனலட்சுமி. நேற்று மதியம், 2:45 மணியளவில் வீட்டு படுக்கை அறையில் விளக்கு ஏற்றி வைத்திருந்தார். காற்றில் தீப்பொறி பறந்து கட்டில், மெத்தையில் தீப்பிடித்தது. கண் இமைக்கும் நேரத்தில் தீ மளமளவென பரவியது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் வருவதற்குள், அங்கிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். தீ விபத்தில் கட்டில், மெத்தை, மர அலமாரி உள்ளிட்டவை தீக்கிரையாகின. வீட்டில் இருந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ