கோவில் நிலத்தில் சாலை அமைக்க பகீரத முயற்சி: பேரூராட்சி மீது புகார்
ஈரோடு: அந்தியூர், அம்மாபேட்டை, ரோஜா நகரை சேர்ந்த மக்கள், கிருத்திகை பிரதோஷ வழிபாட்டு குழுவினர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு வழங்கி கூறியதாவது: அம்மா-பேட்டை காவிரி ஆற்றங்கரையில் பழமையான சொக்கநாத சுவாமி கோவில் உள்ளது. அறநிலையத்துறைக்கு உட்பட்ட இக்-கோவிலில் நந்தவனமும் உண்டு. கடந்த, 2020ல் அம்மாபேட்டை டவுன் பஞ்., நிர்வாகத்தினர், நந்தவனத்தில் இருந்த தென்னை மரங்கள், பூச்செடிகள், பிற செடி, கொடிகளை அழித்து தனியார் மனைப்பிரிவுக்காக சாலை அமைக்க முயன்றனர். கிருத்திகை பிர-தோஷ வழிபாட்டு குழு பக்தர் அறக்கட்டளை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. நந்தவனம் இருந்த இடத்தில் சாலை அமைக்-கக்கூடாது, தென்னை மரம் உள்ளிட்ட செடி, கொடிகளை வைத்து பராமரித்து, 8 வார காலத்தில் கோவில் நிர்வாகத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. அதை செயல்படுத்திய நிலையில் மீண்டும், தென்னை மரம் உள்ளிட்ட செடி கொடிகளை அகற்றிய நிலையில், மக்களின் எதிர்ப்பால் மீண்டும் தென்னை மரம் உள்-ளிட்ட செடிகளை நட்டனர். தற்போது டவுன் பஞ்., கூட்டத்தில், அவ்விடத்தில் பல ஆண்டுகளுக்கு முன் சாலை இருந்ததாக தீர்-மானம் நிறைவேற்றி, சாலை அமைக்க திட்டமிடுகின்றனர். இது-பற்றி விசாரித்து டவுன் பஞ்., நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.