பாரதியார் பல்கலை கால்பந்து போட்டி ஸ்ரீஅம்மன் கலை கல்லுாரி சாம்பியன்
ஈரோடு, பாரதியார் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையான கால்பந்து போட்டி, கோபி கலை கல்லுாரியில் நடந்தது. இதில் வி.ஈ.டி., கல்லுாரி, பாரதிதாசன் கல்லுாரி, ஈரோடு கலை கல்லுாரி, காமதேனு கல்லுாரி, நந்தா கல்லுாரி, கொங்கு கலை அறிவியல் கல்லுாரி மற்றும் ஸ்ரீஅம்மன் கலை அறிவியல் கல்லுாரி உட்பட, 16 கல்லுாரி அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில் ஸ்ரீஅம்மன் கலை அறிவியல் கல்லுாரி, கொங்கு கலை அறிவியல் கல்லுாரிகள் மோதின. இதில் 4 கோல் வித்தியாசத்தில் ஸ்ரீ அம்மன் கலை அறிவியல் கல்லுாரி முதலிடம் பெற்றது. போட்டிகளில் பிற அணிகளிடம் ஒரு கோல் இழக்காமல் கிளீன் ஷிட் முறையில் முதலிடம் பிடித்தது. இந்த வெற்றி மூலம், கோவையில் நடக்கும் போட்டிக்கு தகுதி பெற்றது.வெற்றி பெற்ற மாணவர்கள், பயிற்சியாளர்கள் கமல் மற்றும் யுவராஜ் ஆகியோருக்கு, கல்லுாரி தாளாளர் ஜெயலட்சுமி பாராட்டி, பதக்கம் வழங்கி வாழ்த்தினார். கல்லுாரி முதல்வர் செந்தில்குமார், பேராசிரியர்களும் வாழ்த்து மற்றும் பாராட்டு தெரிவித்தனர்.