உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானிசாகர் அணை நீர்மட்டம்: 10 நாட்களில் 7 அடி உயர்வு

பவானிசாகர் அணை நீர்மட்டம்: 10 நாட்களில் 7 அடி உயர்வு

பு.புளியம்பட்டி, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில், 105 அடி உயரத்துக்கு நீர் தேக்கி வைக்கலாம். மொத்த கொள்ளளவு, 32.8 டி.எம்.சி., அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி மலைப்பகுதியில், கடந்த சில நாட்களாக மழை பெய்தது. கனமழை காரணமாக கோவை மாவட்டம், பில்லுார் அணை நிரம்பியதையடுத்து, உபரி நீர் பவானிசாகர் அணைக்கு திறக்கப்பட்டதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது.கடந்த, 15ல், 83.50 அடியாக இருந்த அணை நீர்மட்டம், 7 அடி வரை உயர்ந்து, நேற்று மாலை, 90.50 அடியாக உயர்ந்தது. அதேபோல் கடந்த, 15ல், 17.7 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு, 21.9 டி.எம்.சி.,யாக உயர்ந்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி, அணைக்கு வினாடிக்கு, 3,016 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து மொத்தம், 1,350 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை