கோவில் பணியாளர்களுக்காக குடியிருப்பு கட்ட பூமி பூஜை
சென்னிமலை, சென்னிமலை, சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பணியாற்றும் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் தங்க குடியிருப்பு கட்டும் பணி ரூ.2.38 கோடியில் நடக்கிறது. இந்த பணியை முதல்வர் ஸ்டாலின், நேற்று காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினர். அதை தொடர்ந்து சென்னிமலை கோவில் அலுவலகம் அருகே பூமி பூஜை நடத்தப்பட்டது. சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி வகையறா கோவில் அறங்காவலர் குழு தலைவர் பழனிவேலு, அறங்காவலர்கள் மனோகரன், பாலசுப்பிரமணியம், சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், துணைத் தலைவர் சவுந்திரராஜன், செயல் அலுவலர் சரவணன், ஆய்வாளர் மாணிக்கம் மற்றும் கலந்து கொண்டனர்.