உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பைக் திருட்டு வழக்கு:மூன்று பேருக்கு காப்பு

பைக் திருட்டு வழக்கு:மூன்று பேருக்கு காப்பு

ஈரோடு:ஈரோட்டில், வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக்கை திருடிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு, வீரப்பன்சத்திரம் காந்திஜி வீதியை சேர்ந்த பெரியசாமி மகன் ரஞ்சித் குமார், 23. கடந்த, 6ம் தேதி இரவு டி.வி.எஸ். ஸ்போர்ட்ஸ் பைக்கை, வீட்டு முன் நிறுத்தி இருந்தார்.மறுநாள் பார்த்த போது பைக் மாயமானது.இதுகுறித்து, வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி, பி.பெ.அக்ரஹாரம் வாய்க்கால் தெருவை சேர்ந்த அரசன், 21, சித்தோடு வினோத், 21, மற்றும் ஈரோடு பேரோடு ஜெ.ஜெ. நகர் விக்ரம், 23, ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பைக்கை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி