உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிவகிரியில் பைக் திருட்டு

சிவகிரியில் பைக் திருட்டு

ஈரோடு :சிவகிரி, மாரப்பம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கவேல், 58; விவசாயி. தோட்டத்தில் வீடு கட்டி வசிக்கிறார். இவர் மனைவி சாந்தி. இவர்கள் மகன் ஹரீஷ் மற்றும் உறவினர்கள் கடந்த, 26ல் வெளியே சென்றனர். தங்கவேல், மனைவி சாந்தி மட்டும் வீட்டில் இருந்தனர். நள்ளிரவில் வெளியே வந்து பார்த்தபோது வீட்டின் உட்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹரீஷின் யமஹா பைக் மாயமானது தெரியவே, மகனிடம் தெரிவித்துள்ளார். ஹரீஷ் வீட்டுக்கு வந்து 'சிசிடிவி' கேமரா பதிவுகளை பார்த்தபோது, சாவியுடன் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை காம்பவுண்ட் சுவர் கேட்டை திறந்து சத்தமின்றி வெளியே கொண்டு வந்து, சிறிது துாரம் சென்ற பின் பைக்கை ஸ்டார்ட் செய்து ஓட்டி செல்வதும் தெரியவந்தது. ஹரீஷ் புகாரின்படி சிவகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி